Saturday, May 5, 2012

Share

நம்பிக்கை....



பொட்டு வைத்த 
பெண் நிலவே!
உன்
உன்னதமான உணர்வுகள்
என்னை ஆட்சி செய்வதால்
தொலைவாகி போனாயோ
தொட முடியாத தூரத்தில்
நான் இருக்கிறேன்.

வரட்சியான இரவில்
நடை பிணமாய் 
அலைந்தை என்னிடம்,
குளிர்சியாய் 
அன்று நீ வந்து
சிந்திய வார்த்தைகளை
இன்னும் நான்
காற்றலையில் 
தேடியலைகிறேன்...

Sunday, April 29, 2012

Share

புரிந்து கொண்டேன்


இறந்த போன
உணர்வுகளுக்கும்
நாடி நரப்புகளில் புகுந்து
புத்துயிர் அளிக்கும்
அதிசயத்தை 
உணர்ந்து கொண்டேன்
அவள் சொரியும்
ஒட்சிசனான பாசத் துளிகளில்..

இடி விழுந்த சோகம்
வாழ்க்கை விழுக்கும்
தருணங்களிலும்
தலை நிமிரும் சூட்சுமம்
அறிந்து கொண்டேன்
அச்சுணனின் வில்லாய்
அவளின் துணிவில்..

பூக்களுக்குள்ளும்
பூகம்பம் உண்டு என்று
புரிந்து கொண்டேன் - அவளின்
வார்த்தைகளின் பிரளயத்தில்..

Thursday, April 12, 2012

Share

புதுவருட வாழ்த்துக்கள்



வாழ்க்கை எனும்
பயணத்தை 
வளமுடனே பயணதித்திட
புத்தாக்கம் அளித்திட
புதிதாய் பிறக்கிறது
நந்தன புதுவருடம்.
மங்களம் பொங்கும்
இந்நாளில்
புது பானையில்….
புதிய எண்ணங்கள்
புதிய முயற்சிகள்
புதிய நம்பிக்கைகள்
புதிய திட்டங்களை 
அறிவு எனும் 
அகப்பையை கொண்டு
உழைப்பு எனும் 
தீயை மூட்டி
பொங்கட்டும் புதுவாழ்வு.

நண்பர்கள் அனைவருக்கும் நந்தன புதுவருட வாழ்த்துக்கள்

Friday, April 6, 2012

Share

உன்னை என்னில்!



ரம்மியமான இரவுவேளையில்
வானம் அமைதியில் கிடக்க
நிலவோ புன்னகையுடன்
நானோ கண்ணீருடன்...

விரிந்த கிடக்கும் 
வானத்தில்,
திட்டுத் திட்டாய் 
முகில் கூட்டம் - என்
மனதின் எண்ணவோட்டத்தில்
பரந்து கிடப்பதோ
உன் நினைவுகள்.

சஞ்சலமடைந்த மனசு
அமைதி இழந்து
தனிமையில் சிக்கி
தவிக்கும் வேளையில்,
குளிர்ச்சியுடன் வீசும் காற்று 
உரசி செல்கையிலும்
நினைவுத் தீ 
மூண்டு எரிகிறது
கருகியே போகிறேன் 
முழுவதுமாய்..

சதியாகி போன
வாழ்வை எண்ணி,
வானத்தில் மூழ்கி
கரைந்து போகும் 
விண்மீன்களைப் போல்
புதைத்து விட்டேன் 
உன்னை என்னில்!

Sunday, March 25, 2012

Share

எதிர்காலம்...



கருவாய் உருவாகி
உருவாய் அரங்கேறி
பருவங்கள் பல தாண்டி
வருங்கால வாழ்வை நோக்கி
நெருக்குது நாட்கள்

சிந்தனை பெருகி
சிகரத்தை தாண்டிட
நின்று நிலைக்குது
நிதானத்துடன் வாழ்வை
நேர்வழி நகர்ந்திட

பந்தங்கள் அனைத்தையும்
பாசத்தால் அலங்கரித்து
வசந்தங்கள் எல்லாம்
என் சுவாசமாய்
வாசம் வீசி 
என் வாசல் சேரும்
என்ற நம்பிக்கையில்...